துன் வீ.தி சம்பந்தனின் சேவைகள் என்றும் நினைவுகூரப்பட வேண்டும் – யுனேஸ்வரன்
- THINAGAREN SANGGAREN
- 30 Jun, 2026
ஜூன் 30
சமுதாயத்திற்கும்
நாட்டிற்கும் தொடர்ந்து செய்த சேவைகளும் தியாகங்களுமே ஒரு தலைவரின் பெருமையை
நிர்ணயிக்கின்றன. இந்தியச் சமூகத்தின் நலன், தேசிய ஒருமைப்பாடு, நாட்டின்
வளர்ச்சிக்காக அடித்தளமிட்ட அரசியல் தலைவர்களில் துன் வீ.தி. சம்பந்தன்
முக்கியமானவர் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ்
தெரிவித்தார். சுங்கை சிப்பூட்
HEADWOOD தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற துன் வீ.தி.
சம்பந்தனின் 107-ஆவது நினைவு நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்ட துணை அமைச்சர் யுனேஸ்வரன் துன் வீ.தி சம்பந்தன்
விட்டுச் சென்ற தலைமைத்துவம், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவை
மனப்பான்மை, குறிப்பாக இளைய தலைமுறைக்கு தொடர்ந்து ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தேசிய
தலைவர்களின் சேவைகளை நினைவுகூருவது வரலாற்றை மீட்டுப் பார்ப்பது மட்டுமல்ல; ஒற்றுமை, அனைவரையும்
உள்ளடக்கிய சமூகம் என்பதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டை உருவாக்கும் பணியைத்
தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பை நினைவூட்டுவதாகவும் அவர்
தெரிவித்தார். துன் வீ.தி.
சம்பந்தனின் பங்களிப்புகளை இன்றைய தலைமுறையினரும் எதிர்காலத் தலைமுறையினர்
தொடர்ந்து நினைவுகூரும் வகையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் துன் சம்பந்தன்
சமூக நல மன்றத்திற்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஒரு தலைவரின்
மரபு அவரது மறைவுடன் முடிவடைவதில்லை என்றும், அவர் விட்டுச் சென்ற
விழுமியங்கள், போராட்டங்களும் உத்வகமும் நாட்டு மக்களின் வழியே
தொடர்ந்து வாழ்கின்றன என ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



