ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- Surendran Sumdraraj
- 17 Sep, 2026
ஜம்மு காஷ்மீர், செப். 17-
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
உதம்பூர் மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ‘ஒயிட் நைட் கார்ப்ஸ்’ படைப்பிரிவினர், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நேற்றிரவு தேடுதல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. மோசமான வானிலை மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக நடவடிக்கையில் சவால்கள் ஏற்பட்டபோதிலும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முன்னேறி தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



