ஜப்பானைத் தாக்கிய ‘துஜுவன்’ புயல்: உயிரிழப்பு 4 ஆக உயர்வு
- Surendran Sumdraraj
- 22 Sep, 2026
தோக்கியோ: ஜப்பானின் கிழக்குக் கடற்கரை பகுதிகளைத் தாக்கிய ‘துஜுவன்’ புயல் காரணமாக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புயல் காரணமாக தோக்கியோவை உள்ளடக்கிய காந்தோ பகுதி, கனகாவா, சிபா மற்றும் இசு தீவுகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சில இடங்களில் வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ளநீரால் சூழப்பட்டன.
ஆரம்பக்கட்ட தகவலின்படி, புயல் மற்றும் வெள்ளத்தால் சுமார் 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும், பல்வேறு பகுதிகளில் சாலைப் போக்குவரத்து மற்றும் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



