துவான் இப்ராஹிம்தான் அடுத்த PN தலைவர்! - பாஸ் ஆன்மிகத் தலைவர் பரிந்துரை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 17: பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவிக்கு, PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மிகவும் தகுதியானவர் என, PAS ஆன்மிக தலைவர் ஹாசிம் ஜாசின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Bersatu தலைவர் முகைதீன் யாசின், கடந்த ஜனவரி முதல் தேதி PN தலைவர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், துவான் இப்ராஹிம் தான் அந்தப் பதவிக்கு சிறந்த தேர்வு என ஹாசிம் ஜாசின் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தலைமைத்துவத்திற்கு தேவையான நான்கு முக்கிய தகுதிகள் துவான் இப்ராஹிமிடம் உள்ளதாக அவர் கூறினார். அவை, இறைவனை அஞ்சுதல், இஸ்லாமிய போதனைகளை நடைமுறைப்படுத்துதல், மறுமை வாழ்க்கைக்கு தயாராக இருப்பது, மற்றும் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பது ஆகியவை என அவர் குறிப்பிட்டார்.

மேலும், துவான் இப்ராஹிம் அவசரமாக செயல்படாத, சமநிலையான அணுகுமுறை கொண்ட தலைவராக இருப்பதால், கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகாது என்றும் ஹாசிம் ஜாசின் குறிப்பிட்டார்.

பெர்லிஸ் மாநில அரசியல் மாற்றத்திற்குப் பிறகு PAS மற்றும் Bersatu இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைத்து, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் திறன் துவான் இப்ராஹிமுக்கு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

PAS அமைப்பு வரிசையில், அஹ்மத் சம்சூரி மொக்தாரை விட துவான் இப்ராஹிம் மூத்தவராக இருப்பதாகவும் ஹாசிம் ஜாசின் கூறினார்.

இதற்கிடையில், PAS தலைவர் அப்துல் ஹாடி அவாங், PN தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துவான் இப்ராஹிம் மற்றும் அஹ்மத் சம்சூரி மொக்தார் ஆகியோரின் பெயர்கள் தற்போது அந்தப் பதவிக்கான முக்கிய வேட்பாளர்களாக பேசப்பட்டு வருகின்றன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *