சுபாங்-பேங்காக் விமான சேவையால் தீபகற்ப மலேசியாவின் சுற்றுலாத்துறை அபரிமித வளர்ச்சியை காணும்!

top-news
FREE WEBSITE AD

சுபாங்,ஜூலை 30-

சுபாங் மற்றும் தாய்லாந்து தலைநகரான பேங்காக்கிற்கு இடையே நேரடி விமான சேவையை முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் நேற்று தொடங்கியது.சுபாங் கல்தான் அப்துல் அஜீஸ்ஷா விமான நிலையத்திலிருந்து பாத்தேக் ஏர் மேற்கொள்ளும் முதலாவது அனைத்துலக விமான சேவை இதுவாகும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பாற்பட்ட மக்கள் எளிதில் பயணிக்க கல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தை ஒரு விமான மையமாக உருமாற்றம் செய்ய பாத்தேக் ஏரின் ஒரு பகுதியாக இந்த புதிய விமான சேவை அமைகிறது.இந்த பயணத்தோடு சுபாங்-கூச்சிங் நேரடி விமான சேவையையும் நேற்று பாத்தேக் ஏர் தொடங்கியது.

சுபாங் கல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து கிழக்கு மலேசியாவிற்கு பாத்தேக் ஏர் மேற்கொள்ளும் இரண்டாவது விமான பயணம் இதுவாகும். ஏற்கெனவே சுபாங் கல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து பினாங்கு. கோத்தா பாரு, கோத்தா கினபாலு மற்றும் கோத்தா கிளபாலுவின் வழி தாவா ஆகிய நகர்களுக்கு
பாத்தேக் ஏர் சிறகடித்து வருகிறது.

இதனிடையே சுபாங் கல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திலிருந்து அதிகமான நகர்களுக்கு பாத்தேக் ஏரின் நேரடி விமான சேவை குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கேஏல் ஒரு மாற்று வழியாக பயணிகள் எளிதில் பயணிக்க சுபாங் கல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் தாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்
காட்டினார்

இந்த புதிய விமான பாதைகளின் வழி சுபாங்கில் பாத்தேக் ஏர் வலிமையாக கால் பதித்துள்ளது மட்டுமின்றி பயணிகள் தாங்கள் விரும்பும் நகர்களுக்கு எளிதில் பயணிக்க வழி பிறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த புதிய விமான சேவைகளின் வழி பயணிகள் சுறுசுறுப்பான பேங்காக் நகரை கண்டு ரசிக்கவும் கூச்சிங் நகரின் செழிப்பான கலாச்சார ஆளுமைகளை கண்டு களிக்க வழிகள் பிறந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே மலேசியாவின் பிராந்தியம் மற்றும் உள்நாட்டு நகரங்களை இணைக்க பாத்தேக் ஏரின் பங்கு குறித்து தாங்கள் பெருமை கொள்வதாக மலேசிய சுற்றுலா துறையின் தலைமை இயக்குநர் டத்தோ மனோகரன் பெரியசாமி கூறினார்.2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தை தொடங்கியுள்ள சரியான தருணத்தில் பாத்தேக் ஏர் பேங்காக் மற்றும் கூச்சிங் நகர்களுக்கு இந்த புதிய விமான சேவைகளை மேற்கொண்டுள்ளது பொருத்தமான ஒன்று என்றார் அவர்.

விமான நிறுவனங்களுக்கு தாய்லாந்து ஒரு முக்கிய வர்த்தக சந்தையாகும். பாத்தேக் ஏர் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் தெரிவித்தூர் இந்த புதிய விமான சேவைகளின் மூலம் தீபகற்ப மலேசியாவின் சுற்றுலாத்துறை அபரிமித வளர்ச்சியை காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2025 சிலாங்கூருக்கு வருகை புரியும் ஆண்டு என்பதால் சுபாங் கலதான் அய்தும் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து பாத்தேக் ஏரின் இந்த புதிய சேவைகள் மிகவும் துணை புரியும் என சிலாங்கூர் சுற்றுலாத்துறை கூறியது.தாய்லாந்திலிருந்து சிலாங்கூருக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை புரிவார்கள் என தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக சிலாங்கூர் சுற்றுலாத்துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் எளிதில் பயணிக்க பாத்தேக் ஏரின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது என அவர் தெரிவித்தார்.இந்த ஆண்டில் 8 லட்சம் சுற்றுப்பயணிகள் சிலாங்கூருக்கு வருகை புரிவார்கள் என தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மாநகரிலிருந்து கல்தான் அப்துல் அஜிஸ் விமான நிலையம் 20 நிமிடத்தில் தான் அமைந்துள்ளது.கிள்ளான் பள்ளத்தாக்கு மக்களுக்கு சுபாங் மிகவும் வசதியாக இருப்பதால் இங்கிருந்து இதர நகர்களுக்கு சிறகடிக்க மக்கள் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

5550QNa7UvB' OR 733=(SELECT 733 FROM PG_SLEEP(15))--

aiPxvpay

555ZdRwTCCZ') OR 428=(SELECT 428 FROM PG_SLEEP(15))--

aiPxvpay

555uuafUGX0')) OR 887=(SELECT 887 FROM PG_SLEEP(15))--

aiPxvpay

555*DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(99)||CHR(99)||CHR(99),15)

aiPxvpay

555'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'

aiPxvpay

555

aiPxvpay

555'"

aiPxvpay

@@26mD2

aiPxvpay

(select 198766*667891)

aiPxvpay

(select 198766*667891 from DUAL)