தாய்லாந்து டிரெய்லரில் மானிய விலை டீசல்! மாற்றியமைக்கப்பட்ட தொட்டியில் கண்டுபிடிப்பு!

top-news

அலோர் ஸ்டார், ஜூலை 12: புக்கிட் காயு ஈத்தாம் பொது நடவடிக்கைப் படை, புக்கிட் காயு ஈத்தாம் தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் நேற்று காலை 9 மணிக்கு  நடத்திய சோதனையின் போது, ​​தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட டிரெய்லரில் டீசல் நிரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ஆய்வுகளில், வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான மொத்த விற்பனை உரிமம் இருப்பதும், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை அங்கீகரிக்கப்படாத தரப்பினருக்கு விற்பனை செய்தததும் தெரியவந்தது.

டிரெய்லரை ஆய்வு செய்ததில், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சேமிக்க மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் தொட்டியும் கண்டறியப்பட்டது.

தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட டிரெய்லருடன் மொத்தம் 1,688 லிட்டர் டீசல் RM5,654.80 மதிப்பிலானதை சோதனைக் குழு கைப்பற்றியதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் கெடா இயக்குநர் முஹம்மது நிஜாம் ஜமாலுடின் கூறினார்.

மொத்தமாகக் கைப்பற்றப்பட்டதன் மதிப்பு RM105,654.80 என்று அவர் தெரிவித்தார்!


 

 

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்