IPTA சேர்க்கை விதிகளில் மாற்றமில்லை – அமைச்சரவை முடிவு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மே 15-

Putrajayaவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உயர் கல்வி அமைச்சர் Zambry Abdul Kadir, தேசிய கல்வி முறைக்கு வெளியே கல்வி கற்ற மாணவர்கள் Kementerian Pendidikan Malaysia அங்கீகரித்த Bahasa Melayu மற்றும் Sejarah பாடங்களில் தேர்ச்சி பெறுவது, பொதுப் பல்கலைக்கழகங்களில் (IPTA) சேர்வதற்கான கட்டாய நிபந்தனையாகவே தொடரும் என்று தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அமைச்சரவை எடுத்துள்ள சமீபத்திய முடிவு சில குறிப்பிட்ட பாடநெறிகளுக்கான மாற்று வழிகளை மட்டும் உள்ளடக்கியது என்றும், ஆனால் IPTA சேர்க்கையின் அடிப்படை நிபந்தனை SPM தகுதிதான் என்றும் விளக்கினார்.

“மாணவர்கள் தேசிய கல்வி அமைப்பிற்கு வெளியே வேறு கல்வி பிரிவுகளில் படித்திருந்தாலும், SPM என்பது கட்டாயமான அடிப்படை தகுதியாகவே இருக்கும். Bahasa Melayu மற்றும் Sejarah பாடங்கள் Lembaga Peperiksaan Malaysia அங்கீகாரத்துடன் தேர்ச்சி பெறப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *