புகாரி ஈக்விட்டி தொடர்பான 4 குற்றச்சாட்டுகளிலிருந்து முகைதீன் விடுவிக்கப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 15: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், புகாரி ஈக்விட்டி நிறுவனத்துடன் தொடர்புடைய மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா நூர்தின், வழக்குத் தரப்பு துணை அரசு வழக்கறிஞர் அஹ்மத் அக்ரம் காரிப், விடுதலை அல்லாத வழக்கு முடித்துவைப்பு எனப்படும் DNAA உத்தரவை கோரியதைத் தொடர்ந்து இந்த விடுவிப்பை வழங்கினார்.

புக்காரி ஈக்விட்டி நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரிங்கிட் பெற்றதாக முகைதீன் யாசினுக்கு எதிராக மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

அதே நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரிங்கிட் தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டதாகவும், அவர் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *