முடிவெடுக்கும் அதிகாரம் முகைதீனுக்கு இல்லை! - பாஸ் அதிரடி
- Shan Siva
- 01 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 1: பெரிகாத்தான் நேஷனலின் அதிகாரப்பூர்வ உறுப்புக் கட்சிகள் மட்டுமே கூட்டணியின் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் முன்மொழிந்தபடி, இகாத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் (IPR) கூட்டணியின் கட்சிகளை பெரிகாத்தான் நேஷனலின் சின்னத்தின் கீழ் போட்டியிட அனுமதிக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
இந்த விவகாரம் எந்தவொரு அதிகாரப்பூர்வ கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை, மேலும் பெரிகாத்தான் நேஷனலின் சின்னத்தைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் போட்டியிட மட்டுமே அனுமதிக்கப்படுமென்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இகாத்தான் பிரிஹாத்தின் ரக்யாட் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் பெரிகாத்தான் நேஷனலின் அங்கங்கள் அல்ல, அப்படியிருக்க இதை நாங்கள் எப்படி அனுமதிக்க முடியும்? அவர்கள் PN-இன் அங்கத்துவ உறுப்பினர்களாக ஆவதற்கு ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
முன்னதாக IPR கூட்டணியின் கீழ் உள்ள கட்சிகள் PN-இன் சின்னத்தைப் பயன்படுத்தி மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடலாம் என்று முகைதீன் கூறினார். மேலும், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்காக இந்தக் கட்சிகள் ஒரு "PN-நிலைக் குழுவுடன்" பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், PN-இன் துணைத் தலைவராகவும் இருக்கும் துவான் இப்ராஹிம், அப்படி ஒரு குழு இருப்பதை மறுத்தார்.
இதற்கிடையில், முகைதீனுக்கு இனி PN தலைவராக இல்லாததால், கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்று PAS பொருளாளர் இஸ்கந்தர் அப்துல் சமாட் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



