முகைதீனின் பெர்சாத்து ஓரங்கட்டப்படலாம்! - ஆய்வாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 28: பாஸ் மற்றும் பெர்சத்து  கட்சிகளுக்கு இடையே அதிகரித்து வரும் மோதலின் காரணமாக, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி "அதன் இறுதிக் கட்டத்தில்" இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி, பெர்லிஸ் மற்றும் நெகிரி செம்பிலானில் நிலவும் பதட்டங்களைச் சுட்டிக்காட்டி, கடந்த ஆண்டில் இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார்.

பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையேயான இந்தத் தீவிரமான மோதல் ஒரு நேரடிப் பிளவுக்கு வழிவகுக்கும், என்று அவர் FMT-யிடம் கூறினார்.

முன்னாள் பெர்சத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் மற்றும் அவருடன் தொடர்புடைய 'ரீசெட்' (Reset) இயக்கத்தை மையமாகக் கொண்டு பாஸ் தனது அரசியல் வியூகத்தை மறுசீரமைத்து வருவதாகத் தெரிகிறது என்று மஸ்லான் கூறினார்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ்-இன் முக்கியப் பங்காளியாக பெர்சத்துவுக்குப் பதிலாக 'ரீசெட்' வர வாய்ப்புள்ளது என்று தாம் நினைப்பதாகவும்,   அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பெர்சத்து இறுதியில் ஓரங்கட்டப்படலாம் என்றும் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *