ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை குறிவைத்து உக்ரைன் அதிரடி டிரோன் தாக்குதல்

top-news
FREE WEBSITE AD

மாஸ்கோ, ஜூன் 4 –

ரஷியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கவிருந்த சர்வதேச பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் ஏவிய டிரோன்கள் நகரின் முக்கிய எண்ணெய் சேமிப்பு நிலையம் மற்றும் கடற்படை தளங்களைக் குறிவைத்து தாக்கியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலால் எண்ணெய் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டதுடன், நகரின் பல பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆளுநர் அலெக்சாண்டர் பெக்லோவ் வெளியிட்ட தகவலின்படி, பல உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. இருப்பினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேவேளையில், ரஷிய வான் பாதுகாப்புப் படைகள் இரவு முழுவதும் பல டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *