டிரோன் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய ஜெலன்ஸ்கி – நார்வே பிரதமர் தகவல்
- Surendran Sumdraraj
- 10 Sep, 2026
ஒஸ்லோ, செப். 10 –
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, டிரோன் தாக்குதலில் இருந்து மிகச் சிறிய இடைவெளியில் உயிர் தப்பியதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, ஜெலன்ஸ்கி சென்ற இடத்திற்கு அருகே டிரோன் தாக்குதல் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்தத் தாக்குதல் சில நிமிடங்கள் முன்போ அல்லது பின்னரோ நடந்திருந்தால் பெரிய உயிரிழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷியா–உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெலன்ஸ்கி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் அதிக பாதுகாப்புடன் நகர்ந்து வருகிறார்.
இதுகுறித்து நார்வே பிரதமர் கூறுகையில், தாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது நிலைமை மிகவும் பதற்றமாக இருந்ததாகவும், வானில் தொடர்ந்து டிரோன்கள் பறந்துகொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கியின் பாதுகாப்பு தொடர்பாக உலக நாடுகள் ஏற்கனவே கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தப் புதிய தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



