கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பகாங் சுல்தான் இரங்கல்

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், ஜூன் 15: நேற்று கோலாலம்பூர் – காராக் விரைவுச்சாலையின் 43வது கிலோமீட்டரில் நடந்த ஒரு கோரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பகாங் சுல்தான் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற ஹோண்டா சிட்டி கார் ஒரு டிரெய்லருடன் மோதியதில், ஒரு வயதுக் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்த இந்த விபத்துச் செய்தியைக் கேட்டதும், பகாங் சுல்தான் மற்றும் அரசியார் வேதனையுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது கடினமான மற்றும் வேதனையான காலகட்டத்தை அனுபவித்து வரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, அரச தம்பதியினர் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தனர்.

 நேற்று மாலை 4.25 மணிக்கு நடந்த விபத்தில், பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற கார், டிரெய்லர் லாரியால் நசுக்கப்பட்டு நால்வரும் பலியாகினர்.

40 வயதான லாரி ஓட்டுநர் காயமடைந்தார், பின்னர் போதைப்பொருள் சோதனையில் அவருக்குப் பாதிப்பு இருப்பது உறுதியானதை அடுத்து கைது செய்யப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *