அம்னோவை நம்ப முடியாது! டி.ஏ.பி திடீர் திருப்பம்!
- THINAGAREN SANGGAREN
- 07 May, 2026
மே 7,
ஒற்றுமை கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் அம்னோவை நீண்ட கால நண்பர்களாக அங்கீகரிக்க முடியாது என டி.ஏ.பி முன்னாள் தலைவரும் Bagan நாடாளுமன்ற உறுப்பினருமான Lim Guan Eng சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். முன்னாள் நிதி அமைச்சருமான Lim Guan Eng பாரிசானில் இருக்கும் அம்னோவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பக்காத்தான் தற்காலிகமானது மட்டுமே என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அம்னோவைப் பலரும் வெறுத்தனர். கடந்த தேர்தலிலும் பாரிசானை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்றாலும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக நிலையான புரிந்துணர்வுடன் ஒற்றுமை கூட்டணி உருவாக்கப்பட்டதாகவும் இந்த ஒற்றுமை கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் நீடிக்க வேண்டியதன் அவசியம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் டி.ஏ.பியின் ஆலோசகருமான Lim Guan Eng தெரிவித்தார். இப்போது வரையும் டி.ஏ.பி அம்னோவை நம்பவில்லை என Lim Guan Eng வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



