நஜீப்பிற்கு ஆதரவு பேரணியில் அம்னோ பங்கேற்காதது துரோகம்!

- Sangeetha K Loganathan
- 05 Jan, 2025
ஜனவரி 5,
முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு ஆதரவாக அம்னோ களத்தில் இறங்காமல் U-TURN செய்திருப்பது அம்னோ நஜீப்பிற்குச் செய்த துரோகம் என CHERAS மாவட்ட அம்னோவின் முன்னாள் தலைவர் Datuk Seri Syed Ali Al-Habshee தெரிவித்தார்.
அம்னோவின் இச்செயலால் பெருமளவில் அம்னோ உறுப்பினர்கள் அம்னோ மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்றும், அம்னோ அரசியல் ரீதியாக மேலும் பலவீனமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
அம்னோ நஜீப்பிற்கு ஆதரவு பேரணியில் பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பது அம்னோ அதன் வழிதடங்களையும் முன்னாள் தலைவர்களின் அர்ப்பணிப்பையும் மதிக்காத தலைமையில் இருப்பது போன்றன் உணர்வு தமக்குள் எழுவதாக அம்னோ மூத்த தலைவரான Datuk Seri Syed Ali Al-Habshee தெரிவித்தார்.
Datuk Seri Syed Ali Al-Habshee mengkritik UMNO kerana tidak menyokong perhimpunan untuk bekas Perdana Menteri Najib Razak. Beliau menyatakan tindakan itu mengkhianati Najib dan melemahkan UMNO, mengurangkan kepercayaan ahli terhadap parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *