அம்னோவிலிருந்து வெளியேறினாலும் அம்னோ அவர்களைக் கண்காணிக்கும்! – ZAHID உறுதி!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 16,

அம்னோவிலிருந்து வெளியேறியவர்களையும் வெளியேற்றப்பட்டவர்களையும் அம்னோ அப்படியே கைவிட்டுவிடாது என்றும் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். ஒரு சிலர் அம்னோவிலிருந்து முழுமையாக வெளியேறி மாற்று அரசியல் கட்சிக்குச் சென்றிவிட்டனர். ஆனால் அம்னோவால் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் அம்னோவுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுமா என காத்திருக்கிறார்கள். அப்படி காத்திருப்பவர்களுக்காக அம்னோவில் சிறப்புக் குழு உருவாக்கப்படும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

அம்னோவின் கதவு திறந்தே இருக்கும். ஆனால் உள்ளே வருவதற்குக் கட்டுப்பாடுகளையும் நாம் விதிக்க வேண்டும். பாஸ், பி.கே.ஆர், பெர்சத்து, அமானா என அரசியல் கட்சிகளில் இருப்பவர்கள் அம்னோவிலிருந்து தங்களின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் என்பதை Datuk Seri Dr Ahmad Zahid Hamidi நினைவூட்டினார். ஆனால் ஒரு சிலர் இன்னமும் அம்னோவில் இணைய வேண்டும் என காத்திருக்கிறார்கள். அவர்களை அம்னோ புறக்கணிக்கவில்லை. அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான நடைமுறைகளை மேலும் உறுதியாக்கி, அவர்களைத் தொடர்ந்து அம்னோவில் தக்க வைத்துக்கொள்வதற்கான சாத்தியக் கூறுகளை மீளாய்வு செய்ய விரும்புகிறது என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். 

அம்னோ மலாய்க்காரர்களுக்கான ஒரு குடை, அது ஒரு பெரிய குடை. இந்த குடையிலிருந்து PAS, Semangat 46, PKR, BERSATU, PEJUANG, Warisan, GRS, GPS என பல சிறிய சிறிய குடைகள் பிறந்தன. ஆனால் இன்றும் அம்னோ நிலைத்திருக்கிறது. மலாய்க்காரர்களின் உரிமையும் அரசியல் பலமும் சிதறிக்கிடந்தாலும் நாம் ஒன்றுப்பட வேண்டும். அதற்குப் பாரிசானின் உறுப்புக் கட்சிகளும் முக்கிய பங்கை வழங்க வேண்டும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi இன்று நடைபெற்ற அம்னோ தேசிய பேராளர் மாநாட்டில் 6,000 அம்னோ உறுப்பினர்களுக்கு முன்னிலையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *