பாஸ் கட்சியுடன் இணைவது தொடர்பாக அம்னோ பரிசீலிக்கும்! – அம்னோ அறிவிப்பு!
- Thinagaren Sanggaren
- 02 Jan, 2026
ஜனவரி 2,
பாஸ் கட்சியுடன் அம்னோ ஒத்துழைப்புகளை வழங்குவதாக அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ அக்மால் சலே வெளியிட்டிருக்கும் கருத்து அவரின் தனிப்பட்ட விருப்பம் மட்டுமே என்றும் அம்னோ தலைமையின் விருப்பமாகக் கருத முடியாது என அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான Dato' Seri Khaled Nordin இன்று தெரிவித்தார். கடந்த காலங்களில் அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து உருவாக்கிய MUAFAKAT NASIONAL எனும் கூட்டணி மலாய்க்காரர்களின் நல்வாழ்வை உறுதிச் செய்வதற்கான ஒரு கூட்டணி மட்டுமே தவிர அது அரசியல் கூட்டணியாக எண்ண கூடாது என Dato' Seri Khaled Nordin விளக்கமளித்தார்.
அம்னோவின் இளைஞர் பிரிவுத் தலைவராக அக்மால் சலே கட்சியின் எதிர்கால நலன்களுக்காகக் கருத்துகளைத் தெரிவிக்க எல்லா உரிமையும் உள்ளது. அக்மாலுக்கு உரிமை இருப்பது போல அனைத்து மட்ட அம்னோ உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளது. பாஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காகப் பெரும்பாலான அம்னோ உறுப்பினர்கள் விருப்பத்தை முன் வைத்தால் அம்னோவின் தலைமை, கட்டாயமாக அம்னோ உறுப்பினர்களின் கருத்துகளைப் பரிசீலிக்கும் என Dato' Seri Khaled Nordin உறுதியளித்தார். ஆனால் இதுவரையில் பாஸ் கட்சியுடன் இணைந்து அம்னோ MUAFAKAT NASIONAL எனும் கூட்டணியை அமைப்பதற்கான எந்தவொரு முன்மொழிவும் வழங்கப்படவில்லை என அம்னோ உதவித் தலைவரான Dato' Seri Khaled Nordin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



