மரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்! டி.ஏ.பிக்கு ZAHID HAMIDI எச்சரிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 13 Jun, 2026
ஜூன் 13,
ஒற்றுமை கூட்டணியிலிருக்கும் அரசியல் கட்சிகளிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் டி.ஏ.பி நடந்து கொள்ள கூடாது என துணைப் பிரதமரும் பாரிசான் தலைவருமான Datuk Seri Dr Ahmad Zahid Hamidi எச்சரிக்கை விடுத்தார். அரசியலில் நிதானம் அவசியம். டி.ஏ.பி பொதுச் செயலாளர் ANTHONY LOKE உட்பட பாரிசானைப் பொதுவெளியில் அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும். கூட்டணிக் கட்சிகளைக் கண்ணியமாக நடத்தவில்லை என்றால் கூட்டணியின் முடிவுக்கு அது வழிவகுக்கும் என Datuk Seri Dr Ahmad Zahid Hamidi டி.ஏ.பியை நேரடியாக எச்சரித்தார்.
பொறுப்புடன் அரசியல் செய்யவே ஒற்றுமை கூட்டணியை அமைத்திருக்கிறோம். மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே கடந்த காலக் கசப்பானச் சம்பவங்களைக் கடந்து ஆட்சிக் கூட்டணியில் பாரிசான் அங்கம் பெற்றுள்ளது. மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கட்சி அடிப்பிடையிலான விமர்சனங்களைத் தவிர்த்து விட்டு மாநில மக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து செயல்படுங்கள் என டி.ஏ.பிக்கு Datuk Seri Dr Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

