அம்னோ யாரையும் பழிதீர்க்க நினைக்கவில்லை! – ZAHID HAMIDI

top-news

டிசம்பர் 8,
கடந்த கால அரசியல் வேற்றுமைகளுக்காகத் தற்போது அம்னோ யாரையும் பழிதீர்க்க நினைக்கவில்லை என அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்தார். பிற அரசியல் கட்சிகளுடன் அம்னோவிற்குக் கருத்து முரண்கள் இருந்தும் இணைந்து பயணிக்க அம்னோவும் பாரிசானும் அஞ்சியதில்லை. அதே போல அம்னோவிலிருந்து நீக்கப்பட்டவர்களையும் பழிதீர்க்கும் எண்ணம் நமக்கு இல்லை என தெரிவித்தார். 
அம்னோவிலிருந்து நீக்கப்பட்ட Datuk Seri Hishammuddin Hussein, Khairy Jamaluddin போன்ற தலைவர்கள் மீண்டும் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபட எண்ணினால் கட்சி அவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi உறுதியளித்தார். அவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்படுவது நான் மட்டும் எடுக்கும் முடிவல்ல. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் முடிவு. சிறந்த தலைவர்களுடன் பயணிக்க நான் விரும்புகிறேன் என Datuk Seri Hishammuddin Hussein, Khairy Jamaluddin இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi.

Presiden UMNO, Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, menyatakan UMNO tidak berdendam terhadap sesiapa, termasuk bekas pemimpin yang dipecat seperti Khairy dan Datuk Seri Hishammuddin Hussein. Mereka boleh dipertimbangkan untuk kembali jika menunjukkan komitmen kepada parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *