அம்னோவுடன் நட்பு! பாஸ் கட்சி அழைப்பு! ஆனால்…..?

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 24,

பாஸ் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையில் ஒற்றுமைகள் பல இருந்தாலும் நல்ல புரிந்துணர்வின்மையால் இணைந்து பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகக் கெடா மாநில மெந்திரி பெசார் Datuk  Seri Sanusi Nor தெரிவித்தார். அம்னோவுக்காகப் பாஸ் கட்சியின் கதவு திறந்திருக்கிறது. நட்பு பாராட்ட அம்னோ விரும்பினால் தாராளமாக உள்ளே வரலாம். ஆனால் சண்டையிட வேண்டும் என்றால் பொதுத் தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டும் என Datuk  Seri Sanusi Nor தெரிவித்தார்.

கெடாவில் அம்னோவுக்கு ஒரு சட்டமன்றம் கூட இல்லை. இன்னும் சொல்ல போனால் அம்னோவிடம் எதுவும் இல்லை. குறைந்தபட்ச நாடாளுமன்றங்களை மட்டுமே வைத்துக்கொண்டு தந்திரமாக ஆட்சியில் நீடித்து வருகிறது. அதே போல கெடா மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியும் என அம்னோ நினைக்க வேண்டாம் என Datuk  Seri Sanusi Nor நினைவூட்டினார். கெடாவில் 36 சட்டமன்றங்களும் 15 நாடாளுமன்றங்களும் உள்ளன. அம்னோ ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் ஆட்சியில் இருக்கும் பெரிக்காத்தானை வம்பிழுக்கிறது. பரவாயில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ முயற்சிக்கட்டும் என Datuk  Seri Sanusi Nor தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *