நான் அம்னோவுக்குப் போகமாட்டேன்! பெரிக்காத்தான் என் வீடு! மகாதீரின் மகன் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 20 Mar, 2026
மார்ச் 20,
அம்னோவிலிருந்து விலகியவர்களை மீண்டும் அம்னோவில் இணைக்கும் திட்டத்தால் அம்னோ மேலும் பலவீனமடையும் என மகாதீரின் மகனும் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான Datuk Seri Mukhriz Mahathir தெரிவித்துள்ளார். நான் அம்னோவிலிருந்து வெளியேறி அம்னோவுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறேன். எனக்கு அம்னோ தேவையில்லை. பெரிக்காத்தான் தான் என்னுடைய வீடு என Datuk Seri Mukhriz Mahathir தெரிவத்தார். அம்னோவின் உதவித் தலைவராகவும் கெடாவின் மெந்திரி பெசாராகவும் இருந்த Datuk Seri Mukhriz Mahathir, தற்போது PEJUANG கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். 2016 நஜீப் தலைமையிலான அம்னோவில் வலிமைமிக்க அரசியல் தலைவர்களில் Datuk Seri Mukhriz Mahathir திகழ்ந்தார். 1 MDB வழக்கில் சிக்கிய அப்போதைய பிரதமரும் அம்னோ தலைவருமான Datuk Seri Najib Tun Razak தொடர்ந்து விசாரணையை மேற்கொண்ட போது அம்னோவைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக முகைதீன் யாசினையும் முக்ரீஸ் மகாதீரையும் அம்னோவிலிருந்து நஜீப் வெளியேற்றினார்.
முக்ரீஸை அம்னோவிலிருந்து வெளியேற்றியதும் அப்போதைய எதிர்கட்சியாக இருந்த பக்காத்தான் கூட்டணிக்கு மகாதீர் தலைமையேற்றதுடன் முகைதீனையும் முக்ரீசையும் இணைத்து பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் 2020-இல் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் முகைதீனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் PEJUANG கட்சியைத் தோற்றுவித்தார் மகாதீர். 2022 நடைபெற்ற பொதுத் தேர்தலில் PEJUANG கட்சியின் வேட்பாளர்கள் 68 நாடாளுமன்றங்களில் போட்டியிட்டு மகாதீர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



