மக்களின் மாறும் எதிர்பார்ப்பை அம்னோ புரிந்துகொள்ள வேண்டும் – ஜொஹாரி அப்துல் கானி
- Surendran Sumdraraj
- 11 Sep, 2026
கோலாலம்பூர், செப். 11 –
காலத்திற்கு ஏற்ப மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மாறி வருவதால், அவற்றை அம்னோ கட்சி தெளிவாகப் புரிந்துகொண்டு, தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள தனது நிலைப்பாடு மற்றும் எதிர்கால திசையைத் தெளிவாக வகுக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தைப் போல வழக்கமான அரசியல் அணுகுமுறையுடன் மட்டும் இனி செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.
இன்றைய நிலையில் அரசியல் கட்சிகளிடமிருந்து பொதுமக்கள் வெளிப்படைத்தன்மை, நல்ல நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றும் ஜொஹாரி சுட்டிக்காட்டினார்.
“மக்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. ஏனெனில் மக்களின் எதிர்பார்ப்புகள் காலத்திற்கு ஏற்ப மாறுகின்றன. முன்பு நாம் முக்கியமாக கருதாத வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி போன்ற அம்சங்களே தற்போது மக்களின் முக்கிய கோரிக்கைகளாக மாறியுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



