ஒற்றுமை கூட்டணிக் கட்சிக்குள்ளேயே மற்ற கட்சிக்குத் தாவுவது துரோகம்! – அம்னோ பொதுச் செயலாளர்.

- Sangeetha K Loganathan
- 15 Dec, 2024
டிசம்பர் 15,
அம்னோவிலிருந்து வெளியேறி பி.கே.ஆர் கட்சிக்குத் தாவுவதை அம்னோ ஏற்றுக் கொள்ளாது, அது வெளிப்படையானத் துரோகம் என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.
பிற கட்சியிலிருந்து வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்கிற கொள்கை சொந்த கட்சி உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவது மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பி.கே.ஆர் கட்சி உணர வேண்டும் என Datuk Dr Asyraf Wajdi Dusuki வலியுறுத்தினார். தன்னுடைய சொந்த கட்சிக்கு வெளிப்படையாகத் துரோகம் இழைக்கும் ஒருவரைக் கூட்டணிக் கட்சியும் வரவேற்பது, அரசியல் நாகரீகமல்ல என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மலேசிய வரலாற்றில் முதன் முறையாக ஆளும் கட்சியிலிருந்து வெளியேறி பிற கட்சியில் சேர்ந்தவர்களால் மலேசியாவே தலை குனிந்த சம்பவம் ஒன்று போதும். அதை மீண்டும் நடத்திட வேண்டாம் என அம்னோ வலியுறுத்துவதாக Datuk Dr Asyraf Wajdi Dusuki எச்சரிக்கை விடுத்துள்ளார்.
UMNO menolak tindakan 'lompat parti' dalam Kerajaan Perpaduan, menyifatkan ia mengancam kestabilan politik. Datuk Dr. Asyraf Wajdi menegaskan tindakan sedemikian mencetuskan perbalahan dan mengingatkan pengalaman pahit yang meruntuhkan kerajaan akibat khianat serta lompat parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *