நெகிரி செம்பிலான் தேர்தல்: பழைய, புதிய முகங்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியல் தயார் – ஜலாலுடின் அலியாஸ்

top-news
FREE WEBSITE AD

ஜெலுபு, ஜூன் 6 –

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான (PRN16) வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டதாக மாநில அம்னோ தலைவர் Jalaluddin Alias தெரிவித்துள்ளார்.

ஜெலுபுவில் நடைபெற்ற எட்டு ஜோடிகளின் கூட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பட்டியலில் அனுபவமிக்க பழைய முகங்களுடன் புதிய முகங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், பல்வேறு கல்வித் தகுதிகளும் தொழில்துறை அனுபவங்களும் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த பட்டியல் விரைவில் அம்னோ தலைவரும் பாரிசான் நேஷனல் (BN) தலைவருமான Ahmad Zahid Hamidi அவர்களிடம் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *