இஸ்லாமியர் அல்லாத மத விவகாரங்களுக்கானப் புதிய அமைச்சு தேவையில்லை! – அம்னோ ஆவேசம்!

top-news

பிப்ரவரி 13,

இஸ்லாம் அல்லதவர்களின் சமய விவகாரங்கள் அடிப்படையில் புதிய அமைச்சு உருவாக்க வேண்டியது குறித்து ஒருமைப்பாட்டு அமைச்சர் Datuk Aaron Ago Dagang கருத்து தெரிவித்திருப்பது அவசியமற்றது என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.  ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர் வேலையை மட்டும் செய்தால் போதும் என்றும், இஸ்லாம் அல்லாதவர்களின் சமய விவகாரங்களுக்கானப் புதிய அமைச்சிற்கான முன்மொழிவுகள் அவசியமற்றது என்றும் Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார்.

புதிய அமைச்சரை நியமிப்பதற்குப் பதிலாக இஸ்லாம் அல்லாதவர்களின் சமய விவகாரங்களை ஒருமைப்பாட்டு அமைச்சரே மேற்கொள்ளட்டும் என்றும் தெரிவித்தார். இஸ்லாமிய மேம்பாட்டு பிரிவான JAKIM போல பிற மதத்தினருக்கும் உருவாக்குவது என்பது கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் Datuk Dr Asyraf Wajdi Dusuki வலியுறுத்தினார்.

UMNO menolak cadangan mewujudkan kementerian khas bagi hal ehwal bukan Islam. Setiausaha Agung UMNO Datuk Dr. Asyraf Wajdi Dusuki menegaskan bahawa cadangan itu tidak perlu dan boleh dikendalikan oleh Menteri Perpaduan. Beliau juga menyatakan ia bertentangan dengan Perlembagaan Persekutuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *