முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் வரவேற்க சிறப்புக் குழு - சாஹிட்

top-news

கோலாலம்பூர், ஜன. 16-

முன்னாள் உறுப்பினர்களை மீண்டும் அம்னோவிற்கு இணைத்துக்கொள்ளும் நோக்கில் ‘சிறப்புக் குழு’ (Jawatankuasa Penyatuan Rumah Bangsa) என்ற குழுவை அமைத்துள்ளதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அக்மத் சாஹிட்ஹமிடி அறிவித்தார்.

தேசிய முன்னணி (BN) தலைவரும் துணைப் பிரதமருமான சாஹிட் ஹமிடி, மீண்டும் இணையும் செயல்முறை தனிநபர்களாகவோ அல்லது குழுவாகவோ மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்தார். “இந்கே  கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. இங்கேயே நாம் பிறந்தோம். எனவே சகோதரர்கள், சகோதரிகள், குடும்ப உறுப்பினர்கள் திரும்பி வருவதற்காக இந்த ஒற்றுமை குழு அமைக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும், “PAS, PKR, BERSATU போன்ற கட்சிகள் அனைத்தும் ஒரே அரசியல் வேரிலிருந்து தோன்றியவை. ஆகவே, நமது சகோதரர்கள் மீண்டும் இந்த இல்லத்திற்குத் திரும்ப வர அனைவரும் தயாரா என்பதை பிரதிநிதி மாநாட்டில் கேட்க விரும்புகிறேன்,” என்றார்.

இந்த அறிவிப்பின்போது, அம்னோவின் 6,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் உற்சாகக் குரலும் கைத்தட்டல்களும் எழுப்பினர். கட்சிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தி, அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த இந்த முயற்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *