ஆயுதமேந்திய கும்பலுக்கும் போலீஸுக்கும் துப்பாக்கிச் சண்டை! ஒருவர் கொல்லப்பட்டார்!

top-news

ரவாங், செப் 25: ரவாங், கம்போங் பாரு குண்டாங்கில் இன்று அதிகாலை போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் போலீஸ் குழு ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரங்களின்படி, சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், அவர்களை போலீஸார் திருப்பித் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து சந்தேக நபர்கள் பலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், மோதலின் போது குறைந்தது இரண்டு போலீஸ் கார்களும் சேதப்படுத்தப்பட்டதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!

 

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்