சுங்கை செபாலிங் தமிழ்ப்பள்ளி சிறிய பள்ளியாக இருந்தாலும் சிறந்த பள்ளி!

- Muthu Kumar
- 10 Jan, 2025
(வீ.இராஜேந்திரன்)
பகாவ், ஜன. 10-
சுங்கை செபாலிங் தமிழ்ப்பள்ளி குறைந்த மாணவர்கள் பயிலும் ஓர் சிறிய பள்ளியாகும்.
சிறிய பள்ளியாக இருந்தாலும் ஓர் சிறந்த பள்ளியாக இப்பள்ளி விளங்கிவருவதாக கடந்த 8-1-2025 ஆம் நாள் மாலை 2.30 மணிக்கு இப்பள்ளியின் பரிசளிப்பு விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து புகழ் மாலை சூட்டினார் தொழிலதிபர் ஆ.மரிதாஸ்.
மேலும் தமது உரையில் இப்பள்ளி மாணவர்கள் கல்வி மற்றும் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்குவதை
அறிந்து கொண்டதாகக் கூறினார். இதனைத்தொடர்ந்து அவர் வருகையாளர்களிடம் தங்களது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதோடு பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி பள்ளிக்கு நிதி உதவியும் வழங்கினார்.
இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற உதவி புரிந்த தொழிலதிபர் ஆ.மரிதாஸ், உதவி ஆசிரியர்கள்,பெ.ஆ.சங்கத் தலைவி ந.ஹேமலதா மற்றும் செயற்குழுவினர், பெற்றோர்கள், மாணவர்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் பள்ளித்தலைமையாசிரியை எம். லெட்சுமி நன்றி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *