பிரதமர் மோடி குறித்து அவதூறு பதிவு: சமூக வலைதளத்தில் கருத்து பகிர்ந்த நபர் கைது

top-news
FREE WEBSITE AD

லக்னோ, ஜூன் 3 –

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனந்த் குமார் சுக்லா என்பவர் தனது சமூக வலைதள கணக்கில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதுடன், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரை அவரது சொந்த கிராமத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *