'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஆர்பி சவுத்ரி விபத்தில் மரணம்! - திரையுலகினர் அதிர்ச்சி
- Shan Siva
- 06 May, 2026
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் ஜீவா, ஜித்தன் ரமேஷ் அகியோரின் தந்தையுமான 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' ஆர்பி சவுத்ரி ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.ராஜஸ்தானை பூர்விகமாக கொண்ட ஆர்பி சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 90க்கும் அதிகமான படங்களை தயாரித்துள்ளார்.
தமிழில் இவர் தயாரித்த முதல் படம் ‛புது வசந்தம்'. தற்போது விஷால் நடிப்பில் 99வது படமாக மகுடம் படத்தை தயாரிக்கின்றனர். விரைவில் இவர்களது தயாரிப்பில் 100வது படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு ஒரு திருமணத்திற்காக சென்ற சவுத்ரி, அங்கு எதிர்பாராத விதமாக நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‛புது வசந்தம், புரியாத புதிர், சேரன் பாண்டியன், கோகுலம், நாட்டாமை, பூவே உனக்காக, சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, ஆனந்தம், வருஷமெல்லாம் வசந்தம், திருப்பாச்சி, ஜில்லா'' உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் இவரது தயாரிப்பில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தவர் சவுத்ரி.
இதனை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பவண் கல்யாண் உள்ளிட்ட திரை பிரலங்கள் மற்றும் பிரமுகர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



