அடுத்த பொதுத் தேர்தல் வரை அன்வாருக்கு ஆதரவு! - ஜாஹிட்
- Shan Siva
- 21 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 21: பாரிசான் நேஷனல், பெரிகாத்தான் நேஷனல் ஜிபிஎஸ் மற்றும் ஜிஆர்எஸ் ஆகியவற்றின் தலைவர்கள் இன்று ஒரு கூட்டத்தை நடத்தவிருப்பதாகப் பரவிய வதந்திகளை, பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
அத்தகைய கூட்டம்
குறித்து தனக்குத் தெரியாது என்று கூறிய துணைப் பிரதமர், அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமர் அன்வார் இப்ராஹிமின்
நிர்வாகத்திற்கு பாரிசான் நேஷனல் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.
சைபர்ஜெயாவில்
நடந்த ஒரு நிகழ்வின் மத்தியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
16 வது பொதுத் தேர்தல் வரை மதானி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே அம்னோ பொதுச்
சபையின் நிலைப்பாடு. உயர்வான முடிவெடுக்கும் அமைப்பு எதுவும் இல்லை, அந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம். எனவே
கவலைப்பட வேண்டாம் என்று அம்னோ
தலைவர் மேலும் கூறினார்.
BN, PN, GPS மற்றும் GRS
தலைவர்கள் இன்று சந்தித்து, பிற்பகல் 2 மணிக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தப் போவதாக சமூக
ஊடகங்களில் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2020-இல், டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான PH அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த நடவடிக்கைகளில் BN, PN, GPS மற்றும் GRS ஆகிய கட்சிகளும் பங்கேற்றன. ஏனெனில், பெர்சத்து கட்சியின் தலைவர் முஹைதீன் யாசின் பிரதமராகப்
பதவியேற்பதற்கு அவை ஆதரவளித்தன.
அன்வாரின்
அரசாங்கத்திற்கு தற்போது 151 நாடாளுமன்ற
உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இது மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு
பெரும்பான்மையை அளிக்கிறது.
இதில்
பக்காத்தான் ஹரப்பானைச் சேர்ந்த 77 நாடாளுமன்ற
உறுப்பினர்களும், BN-ஐச் சேர்ந்த 30 பேரும், GPS-ஐச் சேர்ந்த 23 பேரும், GRS-ஐச் சேர்ந்த ஏழு
பேரும், மேலும் பல கட்சிகள்
மற்றும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர். PN கட்சிக்கு 68 இடங்கள் உள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



