முத்தமிழ் விழா 4.0! தமிழ்ப்போட்டிகளைத் தொடர்ந்து நடத்துங்கள்! – பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓம்ஸ் பா தியாகராஜன் வலியுறுத்து!

top-news

 அக்தோபர் 21,

ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் உப்சி பல்கலைக்கழகத்தின் பரதம் பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டாக முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குச் சிறுகதை எழுதும் போட்டி, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை எழுதும் போட்டி, பல்கலைக்கழக மாணவர்களுக்குச் சொற்போர் என பல்வேறு போட்டிகளுடன் இவ்வாண்டு முத்தமிழ் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தில் பயிலும் நம் இன மாணவர்கள் தொடர்ந்து இது போன்ற தமிழ்ப் போட்டிகளை நடத்த வேண்டும் என முத்தமிழ் விழாவைத் தலைமையேற்ற ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும்
, மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஓம்ஸ் பா தியாகராஜன் வலியுறுத்தினார். தமிழ்ச்சார்ந்த போட்டிகளை மாணவர்கள் ஏற்று நடத்துவதால் இளம் மாணவர்களிடையே மொழி உணர்வு, தமிழ் மொழி மீதான அக்கறையும் மேம்படும் என ஓம்ஸ் பா தியாகராஜன் தெரிவித்தார்.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்
, மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றம், மலர் டி.வி ஆகியவற்றின் ஆதரவுடன் இவ்வாண்டு முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதாக முத்தமிழ் விழா ஏற்பாட்டுக் குழு தலைவரும் உப்சி பல்கலைக்கழகத்தின் பரதம் பண்பாட்டுக் கழகத்தின் தலைவருமான நேஹாஸினி தெரிவித்தார்.

உயர்கல்விக் கூட மாணவர்களுக்கானச் சொற்போர்ப் போட்டியில் கெடா ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் மாணவர்கள் முதல் நிலையிலும் லிப்பிஸ் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் மாணவர்கள் இரண்டாம் நிலையிலும் வெற்றிப் பெற்றனர். சொற்போரில் முதல் நிலையில் வெற்றிப் பெற்ற கெடா ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் மாணவர்களுக்கு 1000 ரிங்கிட் ரொக்கமும்
, இரண்டாம் நிலையில் வெற்றிப் பெற்ற லிப்பிஸ் ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் மாணவர்களுக்கு 800 ரிங்கிட்டும் ஓம்ஸ் பா தியாகராஜன் எடுத்து வழங்கினார். சொற்போரின் சிறந்த பேச்சாளராகக் கெடா ஆசிரியர் பயிற்சிக் கழகத்தின் GEETHA  THILLAIKARASU தேர்வுச் செய்யப்பட்டார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டியில் கிள்ளான் பத்து அம்பாட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவியான
MAHATHI SAI JAGATHEISVARAN முதல் நிலையிலும் சிலாங்கூர் தெலுக் பங்களிமா காராங் தமிழ்ப்பள்ளி மாணவியான LISHALINI PARAMASIVAM இரண்டாம் நிலையிலும் சிலாங்கூர் NORTH HUMMOCK தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவனான NARSHAYAN ROSHINDRAN மூன்றாம் நிலையிலும் THURGASHRI SELVAMANI, KISHORE A/L JAGAN ஆகியோ ஆறுதல் நிலையிலும் வெற்றிப் பெற்றனர்.

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை எழுதும் போட்டியில்
TAMAN PELANGI INDAH இடைநிலைப்பள்ளி மாணவியான KAAVIYA SHREE  SIVAM முதல் நிலையிலும் RIKSHEN NAIR RAVINDRAN இரண்டாம் நிலையிலும்,  SULTAN ABDUL SAMAD இடைநிலைப்பள்ளி மாணவனான GUGAAN KASILINGAM மூன்றாம் நிலையிலும் AARYAN YOGESWARAN, KUMARA KRISH  MANIKANDAN ஆகியோர் ஆறுதல் நிலையிலும் வெற்றிப்பெற்றனர்.

சுமார் 150க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற முத்தமிழ் விழாவைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக நடத்துவோம் என்றும் தமிழ்ப்பள்ளி
, இடைநிலைப்பள்ளி , பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து மேம்பட ஏற்பாட்டுக் குழுவினர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவிருப்பதாக உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் உறுதியளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் உப்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் சேதுபிரகாஷ், லிப்பிஸ் ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரையாளர் திரு.சரவணன் இராமசந்திரன், கெடா ஆசிரியர் பயிற்சிக் கழக விரிவுரையாளர் முனைவர் குமரன், மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றத்தின் தலைவர் திரு.சுரேந்திரன், மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றத்தின் நடுவர்கள், தமிழ்ப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்