உரிமை கட்சிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! ஓடிப்போன TAMIM DAHRI குற்றச்சாட்டு!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 23,

இலங்கை ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மலேசியாவின் அரசியல் கட்சியான உரிமை கட்சிக்குத் தொடர்பு இருப்பதாக TAMIM DAHRI தெரிவித்திருக்கும் கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. லங்காவியில் உள்ள முனீஸ்வரர் ஆலயத்தின் வாசலில் வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தைக் காலால் மிதித்து அவமதித்த குற்றத்திற்காகக் காவல்துறையால் தேடப்பட்டு வரும் TAMIM DAHRI எனும் ஆடவர் உரிமை கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான SATEES MUNIANDYயின் நோன்புப் பெருநாள் வாழ்த்துப் பதிவைத் தனது  THREADS சமூகவலைத்தலத்தில் பகிர்ந்து கிண்டலாக உரிமையும் LTTEயும் என தெரிவித்துள்ளார். 

காவல்துறையால் தேடப்பட்டு வரும் TAMIM DAHRIயின் முகநூல் கணக்கைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC  முடக்கியிருக்கும் இருக்கும் நிலையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற TAMIM DAHRI தற்போது MACAU புனிதத் தளத்தில் இருந்து கொண்டு TANAH.MALAYA எனும் THREADS சமூகவலைத்தலங்களில் தொடர்ச்சியாக இந்து மக்களைப் புண்படுத்தும்படியானக் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். முன்னதாக மகாதீரின் முன்னாள் வழக்கறிஞரும் கோயில்களுக்கு எதிரான கூட்டமைப்பான GARAH அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் HANIFF KHATRI சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கோயில்களுக்கு எதிராகப் போராடும் எங்களுடைய புனிதப் போராட்டம் ஒரு சில நபர்களால் திசைத்திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *