பாஸ் கட்சியுடன் இணைகிறதா உரிமை கட்சி? பேராசிரியர் ராமசாமி விளக்கம்!
- Thinagaren Sanggaren
- 26 Jan, 2025
ஜனவரி 26,
மலாய்க்காரர்
அல்லாதவர்களின் வாக்குகளைக் கவர்வதில் பெரிக்காத்தான் சவாலை எதிர்நோக்கியிருக்கும்
நிலையில் பாஸ் கட்சியுடன் உரிமை கட்சி முறைசாரா பேச்சுவார்த்தையில் (INFORMAL TALKS) ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் எந்தவொரு நிலையிலான
உடன்படிக்கை என்பது தீர்வாகவில்லை என்றும் உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமசாமி
தெரிவித்துள்ளார்.
சீனர்களின்
வாக்குகளைக் கெராக்கான் கவர்ந்து வரும் நிலையில் பினாங்கில் உள்ள இந்தியர்களின் வாக்குகளைக்
கவர உரிமை கட்சி அடுத்தக்கட்ட அரசியல் நகர்வைச் சோதித்து வருவதாகப் பேராசிரியர் ராமசாமி
வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இந்தியர்களைப் போல சீன வாக்காளர்களுக்கும் மடானி
அரசின் மீது அதிருப்தி இருப்பதைப் பாஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் போது உரிமை கட்சி
அரசியல் கூட்டணிகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தி வருவதாகவும் ஆனால் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும்
கட்சியான உரிமை கட்சி பாஸ் கட்சியுடன் இதுவரையில் இணைந்து பயணிக்கும்படியான முடிவுகளை
எடுக்கவில்லை என அவர் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



