விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கும் சூர்யா மகள் "தியா"!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சூர்யாவுடன் தொடர்ந்து அவரது மகள் தியா பயணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இருந்து மும்பைக்கு கல்லூரி படிப்பிற்காக சென்ற தியா சமீபத்தில் பட்டம் பெற்ற நிலையில், சினிமாவில் இயக்குநராக முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறுகின்றனர்.

தாத்தா, அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியம்மா என குடும்பமே நடிகர்களாக உள்ள நிலையில், இயக்குநராக வேண்டும் என்கிற முடிவை தியா எடுத்தது சிறப்பான விஷயம் என சூர்யா ரசிகர்களும் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஷங்கர் மகள் போல ஹீரோயினாக சூர்யாவின் மகள் நடிக்க வராமல், விஜய்யின் மகன் போல இயக்குநராக முடிவு செய்திருப்பது சிறப்பான விஷயம் என பலரும் பாராட்டி வரும் நிலையில், தந்தையுடன் சினிமாவில் பயணிக்க தியா முடிவு செய்துள்ளார் என்றும் விமான நிலையத்தில் சூர்யாவுடன் தியா வந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் உதவி இயக்குநராக போகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்து பட்டமும் பெற்று விட்டார். கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போதே கல்லூரி புராஜெக்ட்டாக தியா இயக்கிய லைட் உமன்கள் குறித்த குறும்படம் "Leading Light" பலரது கவனத்தை பெற்றது. 13 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த குறும்படத்தில் லைட் மேன்கள் போல பெண்களும் அந்த துறையில் பணியாற்றி வருவதை எடுத்துக் காட்டி, சில பிரபல லைட் உமன்கள் தங்கள் அனுபவத்தை பகிரும் ஆவணக் குறும்படமாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *