துருக்கி தீ விபத்து – மலேசியர்களுக்குப் பாதிப்பில்லை!
- Shan Siva
- 22 Jan, 2025
புத்ராஜெயா, ஜன 22: துருக்கியின் Boluவில் உள்ள டில் உள்ள Kartalkaya Ski Resort-ட்டில் உள்ள, The Grand Kartal Hotel-இல் ஏற்பட்ட தீ விபத்தில், 76 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் மலேசியர்கள் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மலேசியா இஸ்தான்புல்லில்
உள்ள துணைத் தூதரகம் மூலம் நிலைமையை உன்னிப்பாகக்
கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
துருக்கி
குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும்
பாதிக்கப்பட்டவர்களுக்கும் மலேசியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த கடினமான நேரத்தில் மலேசியா ஒற்றுமையுடன் நிற்கிறது, மேலும் வலிமை மற்றும் மன உறுதிக்காக பிரார்த்தனை செய்கிறது,”
என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துருக்கியில்
தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் +(90) 312 446 35 47/48 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் அல்லது +(90) 507
812 8406 என்ற எண்ணில் அலுவலக
நேரத்தில் அங்காராவில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், [email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியிலும் உதவி பெறலாம்.
மாற்றாக, அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள துணைத் தூதரகத்தை
+(90) 212 989 10 01/09 என்ற எண்ணில்
அலுவலக நேரங்களில் அல்லது +(90) 531 716 0551 என்ற எண்ணில் அலுவலக நேரத்திற்குப் பிறகு தொடர்பு
கொள்ளலாம். மேலும், [email protected]
என்ற மின்னஞ்சல் முகவரியிலும் உதவியை நாடலாம்.
சர்வதேச அறிக்கைகளின்படி, இறந்தவர்களில் 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று துருக்கிய உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா நேற்று தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



