PKR துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் நூருல் இஸா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 7: PKR துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக  நூருல் இஸ்ஸா அன்வார் அறிவித்துள்ளார்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மக்களுக்கும், சமூகங்களுக்கும் சேவை செய்யும் தனது அர்ப்பணிப்பு எவ்விதத்திலும் குறையவில்லை. எந்த ஒரு பதவியோ அல்லது பட்டமோ இல்லாமல்கூட, மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய முடியும் என்று அவர் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த முடிவு நீண்டகால யோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டது. இது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ள அவர்,  இனி உயர்கல்வி தொடர்வதிலும், அரசியல் களத்திற்கு அப்பாற்பட்ட பொறுப்புகளிலும் தனது நேரத்தை செலவிட விரும்புதாகத் தெரிவித்தார்.

பி கே ஆரின்  துணைத் தலைவராக டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயிலும், தேர்தல் இயக்குநராக டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் இந்தப் பொறுப்புகளை நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் முன்னெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்ந்து தாம் பி கே ஆர் கட்சியின் உறுப்பினராக இருப்பேன். பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில், கட்சித் தலைமையினருடனும், அடிமட்ட உறுப்பினர்களுடனும் இணைந்து, சிறந்த மலேசியாவை உருவாக்கும் கட்சியின் போராட்டத்திற்கு  முழு ஆதரவையும் வழங்குவேன் என்று தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும், அனைத்து நிலைத் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அவர், 2026 ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நடைபெறும் கட்சியின் தேசிய மாநாட்டில் சந்திக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *