ஈரானின் ரேடார், டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
- Surendran Sumdraraj
- 01 Jun, 2026
வாஷிங்டன், ஜூன் 1-
ஈரானின் ரேடார் அமைப்புகள் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (CENTCOM) அறிவித்துள்ளது. இந்த சம்பவம் மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஈரானின் கோருக் (Goruk) பகுதி மற்றும் கேஷ்ம் (Qeshm) தீவில் அமைந்திருந்த ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு தளங்களே தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எம்.கியூ.-1 (MQ-1) ரக ஆளில்லா விமானம் சர்வதேச கடல் பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலின் போது ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு தரைக்கட்டுப்பாட்டு மையம் மற்றும் இரண்டு தாக்குதல் டிரோன்களை அழித்ததாக CENTCOM தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



