ஈரானை நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

top-news
FREE WEBSITE AD

வாஷிங்டன், ஜூன் 3 –

ஈரானை நோக்கிச் சென்றதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளைத் தளபதி (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி, எச்சரிக்கைகளை மீறி ஈரான் துறைமுகத்தை நோக்கிச் சென்ற கப்பலை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'எம்/டி லெக்ஸி' (M/T Lexie) என்ற எண்ணெய் கப்பல் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க போர் விமானம் ஏவிய ஹெல்ஃபயர் ஏவுகணை தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கப்பல் கடுமையாக சேதமடைந்து தனது பயணத்தைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கடல் சட்டங்களுக்கு எதிரானது என்றும், அதற்கான தக்க பதில் அளிக்கப்படும் என்றும் ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *