படுக்கையறையில் இறந்து கிடந்த கணவன் - மனைவி! - சராவாக்கில் சோகம்
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 14: சரவாக், ஸ்ரீ அமான், தாமான்
முத்தியாராவில் உள்ள வீட்டின்
படுக்கையறையில் 40 வயதுடைய கணவன்-மனைவி
இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு இரண்டு
மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்,. மேலும் பல ஆண்டுகளாக
அந்த வீட்டில் வசித்து வருகின்றனர் என்பது அறியப்படுகிறது.
நாட்டின் கல்வி முறையை
முன்னேற்றுவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் உறுதிபூண்ட ஒரு தலைவரை இழந்துவிட்டதாகக்
கூறி, ஜுன்ரானின் குடும்பத்திற்கு
கல்வித் துறை தனது இரங்கலைத் தெரிவித்தது.
ஜனவரி 5 ஆம் தேதி ஜுன்ரான், லுபோக் அன்டு, எஸ்.கே. ஸ்பாங்கியில் தலைமை ஆசிரியராக மட்டுமே பணிக்கு வந்ததாக
அறியப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணைகலள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



