பேருந்து ஓட்டிக்கொண்டே பாட்டிலில் ஏதோ திரவம் ஊற்றிக் குடித்த ஓட்டுநர்! காவல்துறை விசாரணை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: பேராக் மாநிலத்தில் பேருந்தை ஓட்டிக்கொண்டே, ஒரு விரைவுப் பேருந்து ஓட்டுநர் அடையாளம் தெரியாத திரவத்தை ஒரு பாட்டிலில் ஊற்றுவதைக் காட்டும், கடந்த வியாழக்கிழமை 'த்ரெட்ஸ்' (Threads) தளத்தில் பகிரப்பட்ட வைரல் வீடியோ குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

அந்தப் பேருந்துப் பயணிகளில் ஒருவரால் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ குறித்து தங்களுக்கு ஒரு புகார் வந்ததாக தைப்பிங் காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் இஸ்மாயில் கூறினார்.

சம்பவம் நடந்த சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், மெனோரா சுரங்கப்பாதைக்குப் பிறகான பகுதியில் இது நடந்திருக்கலாம் என்று 'த்ரெட்ஸ்' பயனர் குறிப்பிட்டுள்ளார் என்று அவர் கூறியதாக பெர்னாமா  செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தையும், பேருந்து சென்ற உண்மையான வழித்தடத்தையும் காவல்துறை கண்டறிந்து வருவதாகவும், மேலும் இந்த வழக்கு, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 ஆம் பிரிவின் கீழ், பொறுப்பற்ற மற்றும் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக விசாரிக்கப்படலாம் என்றும் மாலிக் கூறினார்.

இந்த வீடியோவைப் பதிவேற்றிய 'த்ரெட்ஸ்' பயனர் உட்பட பொதுமக்கள், இந்த விசாரணைக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

'த்ரெட்ஸ்' தளத்தில் உள்ள அந்த வீடியோவில், ஒரு விரைவுப் பேருந்து ஓட்டுநர், பேருந்தை ஓட்டிக்கொண்டே ஒரு பிளாஸ்டிக் உறையிலிருந்து திரவத்தை ஒரு பாட்டிலில் ஊற்ற முயற்சிப்பது காட்டப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *