நேற்று பூத்த காளான்களால் பிரதமருக்குத் தோல்வி! - PKR மூத்த கட்சி உறுப்பினர்கள் சாடல்! பிரதமரைச் சந்திக்க திட்டம்
- Shan Siva
- 19 Nov, 2026
பெட்டாலிங் ஜெயா, நவ 19: PKR கட்சியின் இந்திய சமூகத்தைச் சேர்ந்த
ஆரம்பக்கட்ட மூத்த உறுப்பினர்கள் டத்தோ இராமச்சந்திரன் தலைமையில் நேற்று ஒன்றுகூடி
ஊடகவியாலாளர் சந்திப்பை நிகழ்த்தி
பரபரப்பான தகவல்களை வெளியிட்டனர்.
தாங்கள் பிரதமருக்கு இந்திய சமுதாயத்தின் நலன் கருதியும், கட்சியின் நலன் கருதியும் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் திட்டங்களை வகுத்து பிரதமரிடம் கொடுக்க முற்பட்டாலும், இடையில் உள்ளவர்களாலும், நேற்று பூத்த காளான்களாலும் நிராகரிக்கப்படுவதாக டத்தோ இராமச்சந்திரன் கூறினார்.
எதுவுமே தெரியாத ஒருவர் இந்திய சமுதாயத்தின் பிரதிநிதியாக இருப்பதுதான் மாநில தேர்தல்களில் பி.கே.ஆர் சந்தித்திருக்கும் தோல்விகளுக்கு முக்கிய காரணம் என அவர் குற்றம்சாட்டினார். மேலும் இந்திய சமுதாயம் அதிருப்தியில் இருப்பதற்கும் இத்தகையவர்களின் செயல்பாடுகள்தான் காரணம் என்று அவர் கூறினார்.
இந்திய சமுதாயத்தின் நலனுக்காக ICC எனும் இந்தியர்களுக்கான சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், எனவே இது தொடர்பான விண்ணப்பத்தை வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி பிரதமரிடம் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் தற்போதைய மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் குறித்துப் பேசிய அவர், பிரதமரிடம் தவறான தகவல்களை ரமணன் தெரிவிப்பதாகவும், தேர்தல் குறித்து அவர்கள் சொன்ன தவறான தகவல்களால்தான் பி கே ஆர் படு தோல்வி கண்டதாகவும் டத்தோ ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் பேசுகையில், "நான் மக்கள் நீதி கட்சியில் 20 வருடங்களாக இருக்கிறேன். இந்திய சமுதாயத்துக்கு ஒரு நல்ல தீர்வு வேண்டும் என்று பாடுபட்டவர்களில் நான்ம் ஒருவன், அதேபோல் பெரிய கூட்டமே எங்களிடம் இருக்கிறார்கள்.
மக்கள் நீதி கட்சி மூன்று மாநிலத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாங்கள் வேதனையில் உள்ளோம். இதைப் பார்த்துக்கொண்டு எங்களால் சும்மா இருக்க முடியவில்லை. வரும் பொது தேர்தலில் மக்கள் நீதிக் கட்சி ஜெயிக்கணும். அதனால் நாங்கள் பிரதமருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
ஐசிசி உடனடியாக அமைக்க வேண்டும். அதாவது இந்தியன் கேபினட் கமிட்டி என்கிற சிறப்புக் குழு எங்களுக்கு வேண்டும். இது வழியாக இந்திய சமூகத்திற்கு என்ன தேவையோ அதனை உடனே நிறைவேற்ற நாங்கள் முயற்சி எடுப்போம். நிச்சயமாக இதை அன்வார் ஆதரிப்பார் என்று நம்புகிறோம்.
வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி, பிரதமரை சந்தித்து எங்க கோரிக்கையை நிறைவேற்றமாறு அவரை நாங்கள் கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.
நிச்சயமாக அவர் எங்களைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். நாங்க செய்ய வேண்டியது, இந்தியர்களின் ஓட்டு மீண்டும் மக்கள் நீதி கட்சிக்கு கொண்டுவர வேண்டும். எங்களுக்கு வேண்டியது யுனிவர்சிட்டி, எங்களுக்கு வேண்டியது நல்ல அழகான ஒரு ஏஐ தமிழ்ப்பள்ளி, வியாபாரத்துல 1.5 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதத்துக்கு வரணும். இதுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இந்த நோக்ககங்களின் அடிப்படையில்தான், வரும் டிசம்பர் ஐந்தாம் தேதி ICC கட்டாயமாக அவர் உருவாக்க வேண்டும் என்கிறோம்.
எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இந்த தோல்வியை. இந்த
தோல்விக்குக் காரணம் ரமணன்தான். இந்திய பிரதிநிதி டத்தோ ஸ்ரீ ரமணன் மற்றும் மற்ற அமைச்சர்களின் செயல்பாடுகள், நம் இந்திய சமுதாயத்தினரின் மத்தியில் திருப்தியாக் இல்லை. மித்ராவுக்கு மில்லியன் கணக்கில் பணம் வந்தாலும், அது முறையாக மக்களைச் சென்றடையவில்லை. சரியான திட்டங்கள் அவர்களிடம் இல்லை.
இந்த சந்திப்பிற்கு வந்திருக்கும் எல்லாரும் பிகேஆர் கட்சியின் தூண்கள். ஆரம்பக்கட்டத்தில் அவர்களின் உழைப்பு அபாரமாக இருந்தது. ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான இந்தியர்களைக் கட்சியில் இணைத்து கட்சியை வலுப்படுத்தினார்கள். ஆனால், இன்று நேற்று வந்தவர்கள் எல்லாம் அன்வார் அருகில் இருந்துகொண்டு, எங்களை ஓரங்கட்டுகிறார்கள் என்று டத்தோ இராமச்சந்திரன் கூறினார்.
ரமணனும் எங்களை மட்டுமல்ல, சமுதாயத்தையும் நேரடியாக அணுகுவதில்லை.
எனவே, கடைசியாக நாங்கள் பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நாங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும்தயாராக இருக்கிறோம், நன்றி என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

