1,000 ரிங்கிட் பரிசுடன் சிறுகதை எழுதும் போட்டி 2025 - UTHM பல்கலைக்கழகம்!
- Thinagaren Sanggaren
- 28 Jul, 2025
ஜூலை 28,
மலேசியாவின் வரலாற்று பின்னூட்டங்களுடன் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர் அ.இரெங்கசாமி அவர்களின் நினைவாகத் துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சொற்போர்க் கழக மாணவர்கள் சிறுகதைப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். தேசிய அளவில் நடத்தப்படும் இச்சிறுகதைப் போட்டியில் அகவை வரம்பின்றி மலேசியர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்றும் அனைத்து வகைமையானச் சிறுகதைகளும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம் என்றும் தமிழும் கதையும் சிறுகதை எழுதும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கதிரவன் சகாதேவன் தெரிவித்தார்.
இச்சிறுகதைப் போட்டியின் முதல் பரிசாக 1,000 ரிங்கிட் ரொக்கமும் எழுத்தாளர் அ.இரெங்கசாமி அவர்களின் நினைவாகச் சுழற்கிண்ணமும் வழங்கப்படும் என்றும் இரண்டாம் பரிசாக 750 ரிங்கிட் ரொக்கமும், மூன்றாம் பரிசாக 500 ரிங்கிட் ரொக்கமும் நான்காம் நிலை முதல் 20 ஆம் நிலை வெற்றியாளர்களுக்குத் தலா 100 ரிங்கிட் ரொக்கமும் வழங்கப்படுவதாகத் தமிழும் கதையும் சிறுகதை எழுதும் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் துணைத் தலைவர் கிஷன் ராவ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
போட்டியின் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் 20 சிறுகதைகளையும் தொகுத்து நூலாக எதிர்வரும் அக்தோபர் 11 வெளியிடப்படும். போட்டியாளர்கள் 19 ஆகஸ்டுக்குள் தங்கள் சிறுகதைகளை ஏற்பாட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். போட்டி தொடர்பான மேலும் விவரங்களை அறிய கதிரவன் த/பெ சாஹாதேவன் (010-9162623) கிஷன் ராவ் சுப்ரமணியம் (012-3701339) ஆகியோரை அழைக்கலாம்.
துன் உசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சொற்போர்க் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழும் கதையும் எனும் சிறுகதை எழுதும் போட்டியின் இணை ஏற்பாட்டாளராக மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றம், ஊடகப் பிரிவு ஆதரவாளர்களாகத் தமிழ் மலர் நாளிதழ், அனேகன் ஊடகம், மலேசியக் கலை உலகம் போன்ற ஊடகத்தினர் இணைந்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
aiPxvpay'||DBMS_PIPE.RECEIVE_MESSAGE(CHR(98)||CHR(98)||CHR(98),15)||'
555
aiPxvpay
555
aiPxvpay'"
555
@@eIDLY
555
(select 198766*667891)
555
(select 198766*667891 from DUAL)
555



