கடலில் பிணமாக மீட்கப்பட்ட ஆட்டிசம் சிறுவன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 6: நேற்று பிற்பகல் பந்தாய் குவாலா கெர்த்தே கடற்கரை ஓரத்தில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட ஆட்டிசம் பாதிப்புள்ள சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.

பாதிக்கப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் உதவிய பொதுமக்கள், மாலை 5.43 மணிக்கு 6 வயது முகமது ஷாஹ்மி ஃபர்ஹான் முகமது ஃபிர்தாஸின் உடலைக் கண்டெடுத்தனர் என்று கெர்த்தே தீயணைப்பு நிலையத்தின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரி மொக்தார் டொல்லா தெரிவித்தார்.

கடற்கரையில் மணலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் அவன் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

பிற்பகல் 3.43 மணிக்கு அழைப்பு வந்ததையடுத்து, ஒன்பது தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மொக்தார் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றியுள்ள கடற்கரையிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில், தீயணைப்பு வீரர்கள் நீரின் மேற்பரப்புத் தேடுதல் முறையைப் பயன்படுத்தித் தேடுதல் பணியை மேற்கொண்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதை உறுதிசெய்ததாகவும், பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கெமாமான் மருத்துவமனையின் தடயவியல் பிரிவிற்கு அவன் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *