ஆட்டிசம் சிறுமி 13வது மாடியிலிருந்து விழுந்து மரணம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 26: திரெங்கானு லாடாங் டோக் பெலாம் அடுக்குமாடிக் குடியிருப்பின் 13வது மாடியிலிருந்து கீழே விழுந்ததில், ஆட்டிசம் பாதிப்புள்ள ஏழு வயது சிறுமி நேற்று உயிரிழந்தார்.

13வது மாடி ஜன்னலிலிருந்து கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படும் சிறுமி, ஆறாவது மாடியில் உள்ள திறந்தவெளியில் கிடப்பதாக காலை சுமார் 7.50 மணியளவில் காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக கோலா திரெங்கானு காவல்துறைத் தலைவர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.

சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, சம்பவ இடத்திலேயே பாதிக்கப்பட்ட சிறுமி இறந்துவிட்டதாக அறிவித்தார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கீழே விழுந்ததால் ஏற்பட்ட கடுமையான காயங்களே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளிப்படுத்தியதாகவும், இதில் எந்தவிதமான குற்றச் செயலும் சந்தேகிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *