உத்தரகாண்ட்: பத்ரிநாத் கோவில் மீண்டும் திறப்பு – பக்தர்கள் திரளாக தரிசனம்
- Surendran Sumdraraj
- 24 Apr, 2026
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில், ஆறு மாத குளிர்கால இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான இந்த திறப்பு விழா ஏப்ரல் 23ஆம் தேதி காலை 6.15 மணியளவில் வேத மந்திரங்களும் பாரம்பரிய பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கோவில், இமயமலைப் பகுதியில் கடும் பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் மூடப்படும். தற்போது காலநிலை சீராகியுள்ளதால், பக்தர்கள் தரிசிக்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவில் திறப்பு நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து திரண்டு வந்து, பகவான் விஷ்ணுவின் அருளைப் பெற தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆன்மிக சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



