100 வயதிலும் கையில் ஊன்றுகோல் இல்லை; இதுதான் காரணம்! - மகாதிர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 3: இந்தப் புத்தாண்டு நமது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
இந்தப் புதிய ஆண்டில் எந்த உறுதியை எடுத்துக்கொள்ளப் போகிறோம்? என்று முன்னாள் பிரதமர் மகாதிர் பொதுமக்களுக்குத் தமது கேள்வியை முன்வைத்துள்ளார்.

இந்த 2026 ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தை முதன்மையான முன்னுரிமையாக மாற்றுவதுதான் சிறப்பான உறுதிமொழியாக இருக்க முடியும் என்று அவர் கூறினார்.

ஏனெனில், ஆரோக்கியம் என்பது அடமானம் வைக்க முடியாத, விற்பனை செய்ய முடியாத மிக மதிப்புமிக்க சொத்து. அந்த சொத்தை அடைவதுதான் உங்களின் கொள்கையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

100 வயது நிரம்பிய இந்தப் பெருமகனின் செய்தியைக் கேளுங்கள். கையில் ஊன்று கோலின்றி வலிமையடனும், உறுதியுடனும் இன்றும் நடக்கிறேன்.
எனவே ஆரோக்கியத்தைக் கடைபிடித்து அதற்கு ஏற்ப உங்கள் நடவடிக்கைகள் அமையட்டும்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என ஒரு பிரத்தியேக நேர்காணலில் மகாதிர் தன் துணைவியாருடன் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *