பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே மும்பை மருத்துவமனையில் அனுமதி
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
மும்பை, ஏப். 12-
இந்தியாவின் பழம்பெரும் பின்னணி பாடகிகளில் ஒருவரான Asha Bhosle உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
92 வயதான ஆஷா போஸ்லே, கடும் சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்று காரணமாக மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முதலில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், பின்னர் குடும்பத்தினர் விளக்கம் அளித்து, அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
ஆஷா போஸ்லேயின் பேத்தி ஜானை போஸ்லே வெளியிட்ட அறிக்கையில், “ஆஷா போஸ்லே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை விரைவில் சீராகும் என நம்புகிறோம். குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



