விக்டர் ஹீரோ அல்ல! கார்ப்பரேட் சாத்தான்! ரமணன் சாடல்!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 26,

பிரபல தொழிலதிபராக அறியப்பட்ட VICTOR CHIN பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சுமார் 95 லட்சம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாகவும் அவருடைய பெற R எனும் எழுத்தில் தொடங்கும் என்றும் தெரிவித்த நிலையில் பி.கே.ஆரில் உள்ள RAMANAN மற்றும் RAFIZI ஆகிய இருவரும் நாங்கள் அந்த R எனும் நபர் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.  ஊழலுக்கு எதிராகப் போராடிய நான் லஞ்சம் வாங்குவதற்கான எந்தவொரு சாத்தியமும் இல்லை என பி.கே.ஆரின் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் RAFIZI RAMLI தெரிவித்த நிலையில் பி.கே.ஆரின் உதவித் தலைவரும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான RAMANAN விக்டரின் குற்றச்சாட்டு ஆதரமற்றவை என்றும் புகழிடம் தேடுவதற்காக விக்டரின் ஒரு தந்திரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபராக அறியப்பட்ட விக்டர் சின் முன்னதாக அம்னோவின் மீதும், காவல்துறையின் மீதும், லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதும் இம்மாதிரி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இப்போது பி.கே.ஆர் பக்கம் திரும்பியிருக்கிறார். அவரை ஹீரோவாக நினைக்க வேண்டாம் அவர் ஒரு corporate சைத்தான் என மனிதவள அமைச்சருமான RAMANAN சாடினார். 

இது போன்ற குற்றச்சாட்டுகளால் அரசு நிறுவனங்களுக்கும் அவமானம் ஏற்படுகிறது. புகழுக்காக விக்டர் சின் பேசும் கருத்துகளுக்கு நான் விளக்கமளிக்கவில்லை என்றால் மக்களும் அரசாங்கமும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அது பாதிக்கும். நான் தைரியமாக வெளியே வந்து நான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவிக்கிறேன். என் தரப்பில் எந்தவொரு குற்றமும் இல்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என் மீதானக் குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் அதை நிரூபியுங்கள். குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புகார்களை மட்டும் வீசாதீர்கள். என் மீது ஏதாவது புகார் இருந்தால், ஆதாரத்துடன் நேரடியாக என் பெயரைச் சொல்லுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என பி.கே.ஆர் உதவித் தலைவரும் மனிதவள அமைச்சருமான RAMANAN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *