வெற்றி நடைபோடும் பேராக் மாநில வளர்தமிழ் விழா
- Surendran Sumdraraj
- 19 Jun, 2026
தி.கிரிஷன்
பேராக், ஜூன் 19-
பேராக் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 26-ஆம் ஆண்டு வளர்த்தமிழ் விழா போட்டியில் மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரா மாநிலப் பேரவை (PERTAMA PERAK), பேரா மாநிலத்தின் 12 மாவட்டங்களில் முதல் நிலையில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்குத் தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக 12 சுழற்கிண்ணங்களை வழங்கியது.
சுழற்கிண்ணங்கள், அதே நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற நிகழ்வுகளில், PERTAMA பேரா மாநிலத்தின் பிரதிநிதிகள் மூலம் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன.
PERTAMA தேசிய துணைத் தலைவரும், பேரா மாநிலத் தலைவருமான விஜய் வேலாயுதம் , தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். இது (PERTAMA PERAK ) பேரா மாநில முன்னாள் தலைவருமான மனோகரன் நம்புபிச்சை முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மாநில அளவிலான வளர்தமிழ் விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளராக வாகை சூடும் பள்ளிக்கு, PERTAMA பேரா மாநிலப் பேரவை சார்பில் கூடுதலாக ஒரு சுழற்கிண்ணம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



